நாளை தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறாரா விஜய்?

தவெக தலைவர் விஜய் நாளை (மார்ச்.4) தஞ்சையில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவுள்ள நிலையில், அக்கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தேர்தல் அறிக்கை குழுவுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வரும் சூழலில், முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகள் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே திமுக மற்றும் அதிமுக தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையில், விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி