திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறாரா வேல்முருகன்?

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும், அந்த ஒரு தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட திமுக கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தவாக தலைவர் வேல்முருகன் கோயம்பேட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். கூடுதல் இடங்கள் கிடைக்காததால் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இன்று மதியம் 1 மணிக்கு வேல்முருகன் தனது முடிவை அறிவிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்தி