விஜய் அரசின் சட்டம்-ஒழுங்கு விவகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். தேர்தலுக்கு முன்பு பேசிய முதல்வர், தற்போது குற்றங்கள் அதிகரிக்கும் போது வாய் திறக்க மறுப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று காலை நடத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் கூட்டம் ஒரு கண்துடைப்பு என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முதல்வர் என்ன செய்யப்போகிறார் என்று நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நன்றி: நியூஸ் தமிழ்