இதற்கு பெயர்தான் தூய ஆட்சியா? - சீமான் கண்டனம்

மின் கணக்கீட்டு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "இதுதான் அரசின் தொலைநோக்கு சிந்தனையா, இதற்கு பெயர்தான் தூய ஆட்சியா?" என கேள்வி எழுப்பியுள்ள அவர், எதற்கு ஆட்சி, அரசு, அமைச்சரவை என சாடியுள்ளார். மேலும், ஆட்சியையும் தனியாரிடம் கொடுத்தால் வீண்செலவு குறைந்து பல்லாயிரம் கோடி மக்களின் வரிப்பணம் மிச்சமாகுமே என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕