ஒவ்வொரு நாளும் உடல்நலனை உறுதி செய்ய குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் நீரிழப்பு தடுக்கப்படும். குழந்தைகள் தினமும் 1.5 லிட்டர் தண்ணீராவது குடித்திருக்க வேண்டும். இது சிறுநீரக செயல்பாட்டுக்கு வழிவகை செய்யும். கடுமையான வெயில் காலங்களில் நீர் குடிக்காமல் இருப்பது நீரிழப்பு, சிறுநீரக கோளாறுகளை ஊக்கப்படுத்தும். ஆகையால், உடலுக்கு தேவையான தண்ணீர் குடிப்பது நல்லது. அதேநேரத்தில், அதிக தண்ணீர் குடிப்பது ரத்த சோடியம் அளவை குறைக்கும்.