அதிமுகவும் பாஜகவும் சதி செய்வதாக அபாண்டமாக பழி - நயினார் நாகேந்திரன்

தவெக ஆட்சியைக் கவிழ்க்க அதிமுகவும் பாஜகவும் சதி செய்வதாக அமைச்சர் நிர்மல்குமார், அடிப்படையே இல்லாத ஒரு அபாண்டமான பழியை நீங்கள் சுமத்தியுள்ளதைப் பார்க்கையில் வேடிக்கையாக இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், நீங்கள் எத்தனை போலிப் புகார்களை அடுக்கினாலும், அழுது புலம்பினாலும், உங்கள் மண்டை மேல் உள்ள கொண்டையான நிர்வாகத் திறனின்மையையும் தவெகவின் ஆட்சியினால் தொடரும் நிர்வாகச் சீர்கேடுகளையும் என்றும் மறைக்க முடியாது என்று சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕