தேர்தலுக்காக 'டாஸ்மாக்' கடைகளில் முன்கூட்டியே மதுபானங்கள் பதுக்கல்?

தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் மதுபானங்களை வாங்கி பதுக்கி வருவதால், டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 10% வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்து. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 4,787 கடைகள் மூலம் மதுபானங்களை விற்பனை செய்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும், தேர்தல் ஆணையம் மது விற்பனையை கண்காணிக்கும். இதனால், கட்சியினர் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, தற்போது அதிகளவில் மதுபானங்களை வாங்கி பதுக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி