புதிய தலைமைச் செயலகம்.. முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?

மீனவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிடுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்த இந்த திட்டத்திற்கு, 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் வெடிக்கும் என்றும் எச்சரித்திருந்தனர். இதனால் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவும், இசிஆரில் மாற்று இடங்களை ஆய்வு செய்யவும் முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி

✕
✕