மதுபாட்டில்களை மறுசுழற்சி செய்யும் திட்டத்தின் கீழ், மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.10 வரி வசூலிப்பது குறித்து அரசுக்கு வணிகவரித்துறை கருத்துரு அனுப்பியுள்ளது. இதற்காக மதிப்பு கூட்டப்பட்ட வரி சட்ட விதிகளில் திருத்தம் செய்ய பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், பாட்டில்களை திரும்ப பெறும் பொறுப்பை உற்பத்தி நிறுவனங்களிடமே ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனால் தமிழகத்தில் மதுபானங்களின் விலை ரூ.10 வரை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.