ஆந்திர மதுபான லாபியின் நுழைவு தற்போது அதிகாரப்பூர்வமாகிவிட்டது என்று காங்கிரஸ் நிர்வாகி சுபத்ரா தேவி தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், 'ஒய்.எஸ்.அனில் ரெட்டியின் நெருங்கிய வர்த்தக கூட்டாளி, தமிழக முதலமைச்சரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மதுபான வலையமைப்பின் அழுத்தத்திற்கு அரசாங்கம் அடிபணிந்துவிட்டதாகத் தெரிகிறது. விஷ்ணு ரெட்டி அதிகாரப்பூர்வமாக தமிழக அரசின் முடிவெடுக்கும் இடத்தில் விஜய் நண்பராக புகுந்து விட்டார். இனி டாஸ்மாக் மூடப்படுவது சந்தேகமே' என குறிப்பிட்டுள்ளார்.