தேசிய அரசியலை புறக்கணிக்கிறதா தவெக?

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்-க்கு ஒதுக்குவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அதிமுக உறுப்பினர் சி.வி. சண்முகம் சட்டமன்ற உறுப்பினரானதால் ராஜினாமா செய்த இந்த இடத்திற்கு வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், காங்கிரஸ்-க்கு அந்த இடத்தை தவெக ஒதுக்கியுள்ளது. தமிழக அரசியலில் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள தவெக, தற்போதைக்கு தேசிய அரசியலில் நுழைய வாய்ப்பில்லை என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி