உணவகங்களில் உணவின் விலையுடன் விதிக்கப்படும் 5% ஜிஎஸ்டி வரி அரசுக்கு சொந்தமானது என்பதால் அதை தவிர்க்க முடியாது, ஆனால் 'சர்வீஸ் சார்ஜ்' என்ற பெயரில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் சட்டப்படி கட்டாயமானது அல்ல. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைப்படி, வாடிக்கையாளரின் அனுமதியின்றி இந்த கட்டணத்தை பில்லில் சேர்ப்பது தவறானது. ஒருவேளை ஹோட்டல் நிர்வாகம் இந்த கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தினால், நுகர்வோர் உதவி மையத்தின் 1915 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.