"இரண்டாவது இடமே போதுமா?": திமுகவுக்கு திருமாவளவன் கேள்வி!

இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்ததை திமுக பெருமையாகக் கருதுவதைச் சுட்டிக்காட்டிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், "இரண்டாவது இடமே போதுமா? முதலிடம் வர வேண்டாமா?" எனக் கேள்வி எழுப்பினார். வெற்றி பெறக் கூடுதல் வாக்குகள் அவசியம் என்றும், தேர்ச்சி பெறத் தேவைப்படும் அந்த ஒரு மதிப்பெண்ணை வழங்கும் ஆசிரியர் யார் என்பதைப் பார்க்க வேண்டாமா என்றும் வினவிய அவர், ஆட்சியைப் பிடிக்கத் தேவையான கூட்டணிக் கணக்குகள் குறித்து திமுகவில் விவாதிக்க ஆளே இல்லை என விமர்சித்தார்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி

✕
✕