நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றியுள்ள நிலையில், வரும் ஞாயிறன்று ரசிகர்கள் சந்திப்பை சென்னையில் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 2031-ஐ குறிவைத்து அரசியல் கட்சி தொடங்கப்போவதாக கூறப்படும் நிலையில், அவரது பின்னணியில் ரஜினிகாந்த் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினி அரசியல் களத்திற்கு வரமுடியாமல் போனதால், தனது குடும்ப உறுப்பினரான ஒருவர் மூலம் அரசியலில் தடம்பதிக்க வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது நடந்தால் ரஜினி ரசிகர்களின் ஆதரவும் தனுஷ்-க்கு கிடைக்கும்.