தேர்தலுக்கு மத்தியில் கவிஞர் ஸ்ரீஜாதோ கைது செய்யப்படுகிறாரா?

மேற்குவங்கத்தை சேர்ந்த பிரபல வங்க மொழி கவிஞர் ஸ்ரீஜதோ பந்தோபாத்யாய்க்கு எதிராக சிலிகுரி நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்ததாகக் கூறப்பட்ட செய்திகள், போலி என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கவிஞருக்கு எதிராக எந்தக் கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்படவில்லை என்றும், "வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்புவதை" வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது. ஸ்ரீஜாதோ சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு கவிதை தொடர்பாக 2017-ல் அவர் மீது வழக்குப்பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி