ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், அவரிடமிருந்து விலகி "எம்ஜிஆர் அதிமுக" என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார். இது குறித்த தனது அதிகாரப்பூர்வ முடிவை அறிவிக்க, நாளை மறுநாள் சென்னை நுங்கம்பாக்கத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார். ஓபிஎஸ் அணியின் முக்கியத் தூணாகக் கருதப்பட்டவரின் இந்தத் திடீர் விலகல் அந்த அணியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி:News18