இந்தியாவுடனான உறவில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஷேர் அப்சல் கானின் கருத்துக்கள் பேசுபொருளாகியுள்ளது. போர் பிரச்சனையில் மோடி பின்வாங்க வாய்ப்பு உள்ளதா? என்று நிருபர்கள் அவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு, "எப்படியும் மோடி என் அத்தையின் மகன் அல்ல. நான் விரும்புவது போல் அவர் காரியங்களைச் செய்வதில்லை" என்றார்.