நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடந்த அரசு நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் சாதி ரீதியாக புறக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. முதலமைச்சரிடம் நல்லவர் போல் நடித்து தொண்டர்களிடையே கொமதேக கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் பகையை உருவாக்குவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதே போல் 'திருச்செங்கோட்டில் ஈஸ்வரன் மீண்டும் போட்டியிட்டால் அங்கு திமுக இருக்காது' என பேசிவருவதாகவும் அக்கட்சியினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.