தேமுதிக வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. இந்நிலையில், தேமுதிக-வின் முக்கிய நிர்வாகியான நடிகர் மீசை ராஜேந்திரன், தன்னை கட்சியில் இருந்து விடுவிக்குமாறு பிரேமலதாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. கேப்டன் மன்றத்தில் 31 ஆண்டும், கட்சியில் 21 ஆண்டும் உழைத்த தனக்கு, இந்த தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நன்றி: பாலிமர்