திண்டிவனம் விசிக எம்எல்ஏ வன்னியரசு அமைச்சர் ஆக உள்ளதாக தகவல்?

திண்டிவனம் விசிக எம்எல்ஏவும், துணைப் பொதுச் செயலாளருமான வன்னியரசு அமைச்சர் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக அமைச்சரவை விரிவாக்கம் நாளை (மே 21) நடைபெறவுள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்களுக்கு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இந்த சூழலில் வன்னியரசுவுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இலாகா ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் இணைவது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் இன்று அறிவிப்பு வெளியிடுவார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி