நாம் வெளியே கிளம்பும்போது பூனை குறுக்கே வந்து விட்டால் அதை அபசகுனம் என்று சொல்வார்கள். இதற்கு காரணம் அந்த காலத்தில் தெருவிளக்கு கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் மாட்டு வண்டியில் தான் பயணம் செய்ய வேண்டும். இருட்டில் லைட் போட்டு வைத்திருப்பது போல பூனையின் இரண்டு கண்களும் அப்படியே மின்னும். பூனையின் கண்களை பார்த்து வண்டியில் பூட்டி வைத்திருக்கும் மாடு பயந்து மிரண்டு விட கூடாது என்பதற்காக வண்டியை ஓட்டுபவர்கள், பூனை எதிரே வந்தால், சிறிது நேரம் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு மாட்டிற்கு தண்ணீர் காட்டி விட்டு செல்வார்களாம்.