வெறும் வயிற்றில் டீ குடிப்பது நல்லதா?.. கெட்டதா?..

காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பது உடலுக்கு சில மாற்றங்களை ஏற்படுத்தலாம். டீயில் உள்ள கஃபீன் வயிற்றில் அமில சுரப்பை அதிகரித்து அஜீரணம், எரிச்சல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். தொடர்ந்து குடித்தால் வயிற்றுப்புண் அபாயமும் அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைவு, சோர்வு போன்ற உணர்வுகளும் வரும் என்கின்றனர். அதனால் காலையில் முதலில் தண்ணீர் குடித்து, பின்னர் உணவுக்குப் பிறகு டீ குடிப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி