இரும்புச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சூப்பர்ஃபுட்டாக கீரை கருதப்பட்டாலும், அதனை அதிகப்படியாக உட்கொள்வது சிறுநீரக கற்கள் உருவாகும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கீரையில் அதிகப்படியான ஆக்சலேட் உள்ளதால், ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு அல்லது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் உள்ளவர்கள் இதனை அளவோடு எடுத்துக்கொள்வது அவசியமாகும்.