பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள், தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை உட்கொள்வது அவர்களின் இறப்பு அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முட்டையில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால், ஏற்கனவே இதயம் தொடர்பான அல்லது வளர்சிதை மாற்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சரிவிகித உணவுகளை பின்பற்றுவதே பாதுகாப்பானது என்று அறிவுறுத்தப்படுகிறது.