சமைப்பதற்கு முன் கோழி இறைச்சியை தண்ணீரில் கழுவுவதால் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் குழாய் தண்ணீரில் கழுவும்போது, அந்த நீர் நம்முடைய கைகள், ஆடை மற்றும் சமையலறை பாத்திரங்கள் ஆகியவற்றில் தெறிக்கிறது. இதனால், அதிலுள்ள கேம்பிலோபாக்டர் (Campylobacter) எனும் பாக்டீரியா நமது உடலில் தொற்றாக பரவும் அபாயம் அதிகரிக்கிறது என பிரிட்டன் உணவு தர முகமை நீண்ட காலமாக எச்சரித்து வருகிறது.