திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஊழியர்களும், அர்ச்சகர்களும் பணம் வாங்கிக்கொண்டு சிலரை மட்டும் சண்முக விலாச மண்டப இரும்பு கேட் வழியாக அனுமதிப்பதாகக் கூறி, பல மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் இன்று (மே 17) காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆவேசமடைந்த பக்தர்கள் அங்கிருந்த இரும்பு கேட்டை பலவந்தமாக தள்ளிவிட்டு உள்ளே நுழைந்ததால் கோவிலில் பெரும் தள்ளுமுள்ளுவும் பரபரப்பும் ஏற்பட்டது.
நன்றி:SunNews