தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமாகா இணைவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவெக விடுத்த அழைப்பை ஏற்று இடைத்தேர்தலில் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ள வாசன், முன்னதாக என்டிஏ கூட்டணியிலிருந்து விலகி புதிய பாதையில் பயணிக்கத் தொண்டர்கள் விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். இதனால் தமாகாவின் தற்போதைய நகர்வுகள், தவெக கூட்டணியில் இணைவதற்கான வலுவான அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது.