நாம் ஜிம்மில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்யும்போது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், அட்ரீனலின் சுரப்பு போன்றவை அதிகமாகி மாரடைப்பு அபாயத்தை உண்டாக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடினமான உடற்பயிற்சியை செய்யும்போது படிப்படியாக பயிற்சி நேரத்தை அதிகரிப்பது நல்லது. சர்க்கரை நோய், இதயநோய், அதிக ரத்த அழுத்தம், அதிக உடல் எடை இருப்போர் திடீரென அதிக உடற்பயிற்சி செய்வது மாரடைப்புக்கு வழிவகை செய்யும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.