தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததால் அதிருப்தியடைந்த திமுக தலைமை, விசிகவின் முக்கிய நிர்வாகிகளைத் தன் பக்கம் இழுக்க முயல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விசிகவிலிருந்து பனையூர் பாபு ஏற்கனவே விலகியுள்ள நிலையில், அடுத்ததாக அக்கட்சியின் முக்கிய முகங்களான வன்னி அரசு மற்றும் கௌதம சன்னாவை திமுகவிற்கு கொண்டுவரப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.