CSK-வின் "விசில் போடு" விளம்பரம் மாறுகிறதா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின், விசில் போடு விளம்பரம் மாற்றப்படுவதாக கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த CSK இயக்குநர் காசி விஸ்வநாதனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “இப்போதைக்கு அதைப்பற்றி நான் பேசவில்லை” என தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜயின் கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த கேள்வி எழுந்துள்ளது. 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி