அதிமுக தொண்டர்களை “ரத்தத்தின் ரத்தங்கள்” என்று எம்.ஜி.ஆர் அழைப்பார் என்றும், அதிமுக ரத்தம் இருக்கும் வரை தொண்டர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும், ஓ. பன்னீர்செல்வம் உடலில் அதிமுக ரத்தம் ஓடுகிறதா என்பது குறித்து அவரே பதில் சொல்ல வேண்டும் எனவும் கடம்பூர் ராஜு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.