அமெரிக்கா பொருளாதார தடை விதித்தால் அனைத்து வழிகளிலும் தாக்குவோம்: ஈரான்

ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதில் அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அமைதி ஒப்பந்தம் எட்டப்படாததால் ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ஈரான் ராணுவம், பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால் தரை, கடல் மற்றும் வான் என அனைத்து வழிகளிலும் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. மேலும் ஈரானுக்கு உதவும் பிற நாடுகளும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா தெரிவித்துள்ளதால், சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕