ஈரான் போர்: அமெரிக்காவின் செலவு ரூ.4.18 லட்சம் கோடி

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, 7 மாதங்களாக நீடிக்கும் மோதலில் அமெரிக்காவின் செலவு ரூ.4.18 லட்சம் கோடியாக (43.6 பில்லியன் டாலர்) அதிகரித்துள்ளது. இதில் ஆயுதங்களுக்கான செலவு மட்டும் ரூ.2.69 லட்சம் கோடியாக உள்ளது. தொடர்ந்து நடக்கும் போரால் மாதத்திற்கு சுமார் ரூ.28,780 கோடி செலவாகிறது. இந்த விவரங்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. போர் கப்பல்கள், விமானங்கள், ஆயுத இழப்பு மற்றும் வீரர்களின் மருத்துவ உதவிக்கான செலவுகளும் இதில் அடங்கும்.

தொடர்புடைய செய்தி

✕
✕