அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சேதமடைந்த அணுசக்தி மற்றும் ராணுவ தளங்களை ஈரான் தீவிரமாக சீரமைத்து வருகிறது. பார்ச்சின், நடன்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட பகுதிகளில் இந்த மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதை காட்டும் செயற்கைக்கோள் படங்களை சர்வதேச ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன. அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களை மீறி இந்த புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.