ஹார்முஸ் நீரிணையில் ஈரான் புதைத்த கண்ணிவெடிகள் அனைத்தையும் ஈரானால் மீண்டும் கண்டுபிடிக்க முடியாததால் நீரிணையை முழுமையாக திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முறையாக திட்டமிடாமல் கண்ணிவெடிகளை புதைத்ததே இந்த குழப்பத்திற்கு காரணம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த நீர்வழி பாதையில் செல்லும் கப்பல்களுக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.