சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதில் இரு நாடுகளும் ஒரே கருத்தை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை எப்போதும் திறந்து வைக்க வேண்டும் என ஜி ஜின்பிங் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.