சவுதியின் சுல்தான் விமானப்படை தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அமெரிக்காவின் மிக முக்கிய E-3G வான் கண்காணிப்பு ரேடார் விமானம் சிதைந்து நொறுங்கியது. சுமார் ரூ.4,750 கோடி மதிப்பிலான இந்த விமானத்துடன், வானில் எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்களும் பலத்த சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் வான்வழி உளவு திறனில் முக்கிய கண்ணாக திகழ்ந்த இந்த விமானத்தின் அழிவு, அந்நாட்டின் ராணுவ வலிமைக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.