அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், எந்த வகையான தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு ஈரான் ராணுவத் தளபதி அமீர் ஹதாமி ராணுவத் தளபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வரும் வாரங்களில் ஈரானுக்கு எதிராகக் கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த புதிய எச்சரிக்கையைத் தொடர்ந்து உஷார்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா தரைவழித் தாக்குதலைத் தொடங்க முயன்றால், ஒரு எதிரி சிப்பாய்கூட உயிர் பிழைக்க மாட்டார் என்றும் ஹதாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.