அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது. ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். மேலும், ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அந்நாட்டு அருகே அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை அனுப்பப்பட்டுள்ளது. யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஈரானை நோக்கி ஒரு அமெரிக்க போர்க்கப்பலை அனுப்ப டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.