அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் வரி விதிப்பு கொள்கைகளை ஆயுதமாக பயன்படுத்துகிறது என இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்தியா, ஈரான் போன்ற இறையாண்மை உள்ள நாடுகள் மீது அதிக வரி மற்றும் பொருளாதார தடைகள் விதிக்கப்படுவது, சர்வதேச சட்டங்களை மீறும் ஏகாதிபத்திய நடவடிக்கையாகும் என தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் இந்த திட்டங்களை ஒருங்கிணைந்து தடுக்க வேண்டும் என்றும், அதற்கு ஈரான் தனது முழு ஆதரவையும் அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.