இஸ்ரேலின் மீது ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் அடுத்தடுத்து ஏவுகணை ஏவி வருகிறது. இஸ்ரேல் ராணுவ தலைமையகம் மீது ஈரானின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த வகையில் கிர்யா பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தை ஏவுகணை குறிவைத்து தாக்கியது. மொத்தம் 150-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஈரான் ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 50 ஏவுகணைகளை தடுத்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.