“பேச்சுவார்த்தை நடத்தவில்லை”.. டிரம்ப் கருத்துக்கு ஈரான் மறுப்பு

அமெரிக்க ஐக்கிய நாடுகளும், ஈரானும், கடந்த இரண்டு நாட்களாக, மத்திய கிழக்கில் நிலவும் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் இந்த போரை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், “அமெரிக்காவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேச்சுவார்த்தை நடைபெறவில்லை” என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஈரான் எச்சரிக்கையால் பயந்துபோய் தான், டிரம்ப் பின்வாங்கியிருப்பதாக ஈரானிய ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

தொடர்புடைய செய்தி