ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் கட்டணம் விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை ஈரான் அரசு தயாரித்துள்ளது. ஒரு நாட்டின் கடல் எல்லை வழியாக பொருட்கள் கடந்து செல்லும்போது கட்டணம் வசூலிப்பது இயல்பான நடைமுறை என தெரிவித்துள்ள ஈரான், இதை விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. சர்வதேச எரிசக்தி போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நீரிணையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, உலக வர்த்தக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.