ஈரானில் நிலவி வரும் அசாதாரணமான சூழல் காரணமாக அந்நாட்டின் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலிருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் சர்வதேச விமானச் சேவைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் கூறுகையில், ‘பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஈரான் வான்வெளியைத் தவிர்த்து மாற்றுப் பாதைகளில் விமானங்கள் இயக்கப்படும்’ என குறிப்பிட்டுள்ளது.