தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி எஸ்.பி சிலம்பரசன் சென்னை சட்டம்-ஒழுங்கு உதவி ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார். நெல்லை மாநகர துணை ஆணையர் மதன் தூத்துக்குடி எஸ்.பியாகவும், விஜயகுமார் திருநெல்வேலி மாநகர துணை காவல் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்தார்.

தொடர்புடைய செய்தி