IPL தொடரின் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் இன்று மோதி வருகின்றன. சண்டிகரில் உள்ள முல்லான்பூர் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து, 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாட தயாராகி வருகிறது.