இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. நேற்றிரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில், தரம்சாலாவில் நடைபெற்று வந்த பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, நடப்பு ஐபிஎல் தொடரில் 57 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.