18வது ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது. மார்ச் 22-ல் தொடங்கும் முதல் போட்டியில் ஆர்சிபி - கேகேஆர் அணிகள் மோதுகின்றன. மே 20-ம் தேதி நடைபெறும் முதல் தகுதிச்சுற்று போட்டியும், மே 21-ல் வெளியேற்றும் சுற்று போட்டியும் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. மே 23-ம் தேதி நடைபெறும் 2வது தகுதிச்சுற்று போட்டியும், மே 25-ம் தேதி இறுதிப்போட்டியும் கொல்கத்தாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.