RCB அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற PBKS அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் தங்களது முதல் கோப்பையை வெல்ல பலபரீட்சை நடத்த உள்ளன. இந்த சீசனில் இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. முதல் ஆட்டத்தில் PBKS 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் RCB 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. அதன்பின், குவாலிஃபயர் - 1 ஆட்டத்தில் PBKS அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் RCB அணி வீழ்த்தியது.
நன்றி: IPL