RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஆட்டமிழந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். நிதானமாக விளையாடிய விராட் கோலி அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 43 ரன்களில் ஓமர்சாயிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். தற்போது RCB அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. லிவிங்ஸ்டன் 19* மற்றும் ஜித்தேஷ் ஷர்மா 11* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.